SMART SCIENCE TUTOR
மாதிரிப் பரீட்சை (01)
விஞ்ஞானம் - 11
• பகுதி A இல் தரப்பட்டுள்ள 4 வினாக்களுக்குமான விடைகளை தரப்பட்டுள்ள இடத்தில் எழுதுக.
• பகுதி B இல் தரப்பட்டுள்ள 5 வினாக்களில் உங்களுக்கு விருப்பமான 3 வினாக்களுக்கு மாத்திரம் விடையளிக்க.
பகுதி - A - அமைப்புக் கட்டுரை
A) 1).பின்வரும் உருவில் வீட்டுத்தோட்டத்துடன் கூடீய பிரதேசம் காட்டப்பட்டுள்ளது. இவ் வீட்டுத்தோட்டத்தில் உயிர்பல்வகைமையும் அதிகளவில் காணப்படுகின்றன.
![]() | ||||
1. உருவில் காட்டப்பட்டுள்ள அங்கிகளை பயன்படுத்தி மூன்று இணைப்புக்களைக் கொண்ட உணவுசங்கிலியொன்றை கட்டியெழுப்புக.
2. மேலே நீங்கள் எழுதிய உணவுச்சங்கிலியில் சக்தி இழப்பு எவ்வாறாக நிகழ்கின்றது என்பதனை விவரிக்க.
3. தற்போது வீட்டுத்தோட்டங்களில் இரசாயன பசளை மற்றும் பீடைநாசினிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் 2ஐ குறிப்பிட்டு மாற்றீட்டு நடவடிக்கையொன்றை எழுதுக.
4. பல்பயிர்ச்செய்கை என்றால் என்ன?
5. மேலே உருவில் காட்டப்பட்டுள்ள வீட்டுத்தோட்டம் உயிர்கோளத்தின் எவ் ஒழுங்கமைப்பு மட்டத்தினுள் அடங்கும்? காரணம் தருக.
B) ஓர் உயிர்புவி இரசாயன சக்கரத்தின் வரிப்படம் இங்கு தரப்பட்டுள்ளது.
1. இவ்வரிப்படம் வகைக்குறிக்கும் உயிர்ப்புவி இரசாயனசக்கரம் யாது?
2. Y செயன்முறை யாது?
3. A, B , C , D ஆகிய எழுத்துக்களால் காட்டப்படும் சேர்வைகள் யாவை?
4. Y செயன்முறையினூடாக பயன்படும் நுண்ணங்கியொன்றைக் குறிப்பிடுக.
5. மின்னல் ஏற்படும் போது நைதரசன் புவியை வந்தடையும் செயன்முறையை விளக்குக.
6. உயிர்புவி இரசாயனங்கள் காரணமாக ஏற்படும் நன்மையொன்றை குறிப்பிடுக.
02) உயிர் சடப்பொருட்கள் ஆக்கப்பட்டுள்ள இரசாயன சேர்வைகளை சேதன சேர்வைகள் அசேதன சேர்வைகள் என 2 கூட்டங்களாக வகைப்படுத்தலாம்.
1. உயிர் அங்கிகளில் அதிகளவு காணப்படும் அசேதன சேர்வை எது?
2. உயிர் சடப்பொருள் ஆக்கப்பட்டு;ள்ள பிரதான சேதன சேர்வைகள் உயிரியல் மூலக்கூறுகள் எனப்படும். இவ் உயிரியல் மூலக்கூறுகளை குறிப்பிடுக.
3. பின்வரும் இருசக்கரைட்டுக்களை ஆக்கும் ஒருசக்கரைட்டுக்களை குறிப்பிடுக.
சுக்குரோசு -
இலக்ரோசு -
4. ஒருசக்கரைட்டை இனங்காண்பதற்கான பரிசோதனையை குறிப்பிடுக.
5. அதிகளவு புரதம் அடங்கிய உணவுகள் 2 தருக.
6. அங்கிகிளில் நடைப்பெறும் உயிர் இரசாயன தாக்கங்;களின் தாக்கவீதத்தை அதிகரிக்கச்செய்யும் விசேட புரதம் எவ்வாறு அழைக்கப்படும்?
7. மாப்பொருளை நீர்பகுப்படைய செய்யும் நொதியத்தையும் அதன் இறுதி விளைவையும் குறிப்பிடுக.
நொதியம் -
இறுதி விளைவு -
03) 1) பௌதீக நிலைக்கேற்ப சடப்பொருளின் மூன்று நிலைகளும் எவை?
2) பின்வரும் அட்டவணையை நிரப்புக.
3) இதிலுள்ள p , e, n எண்ணிக்கையை தருக.
e-
n-
4)ஆவர்த்தன அட்டவணையின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.அது தொடர்பான பின்வரும் வினாக்களுக்கு விடை தருக. (மூலக குறியீடுகள் உண்மையானவை அல்ல.)
1. பின்வரும் மூலகங்களின் கூட்டங்களையும் ஆவர்த்தனங்களையும் தருக.
A
Y
2. மூலகம் X இன் இலத்திரன் நிலையமைப்பை தருக.
3. பின்வரும் மூலகங்களைக் குறிப்பிடுக.
அதிக்கூடிய முதலாம் அயன்னாக்க சக்தி கொண்டது -
அதிக்குறைந்த முதலாம் அயன்னாக்க சக்தி கொண்டது -
மின்குமிழில் அடைக்கப்படும் வாயு -
4. Z யும் Y யும் சேர்த்து உருவாக்கும் சேர்வையின் சூத்திரம் தருக.
04) 1) சிற்றறைக்கும் குருதி மயிர்த்துளைக்குழாய்க்கும் இடையிலான வாயுப்பரிமாற்றம் காட்டப்பட்டுள்ளது.ஏச்செயன்முறை மூலம் இப்பரிமாற்றம் நிகழும்?
![]() |
க. பொ. த. (சாதாரண தரம்) – 2025/2026 மாதிரிப் பரீட்சை (01) விஞ்ஞானம் - 11 |
2) இச்சிற்றறை அதன் தொழிலுக்காக கொண்டுள்ள 2 இசைவாக்கங்களை தருக.
3)A, B, C, D, Eஎன்பவற்றை பெயரிடுக.
4)X, Y என்பன வாயுக்களாகும்
X-
Y-
5)மூக்குழியில் உட்சுவாசவளி செல்லும் போது ஏற்படும் மாற்றங்கள் 2 தருக?
6)கலச்சுவாசம் என்றால் என்ன?
7)பொதுவான சுவாச தொகுதியுடன் தொடர்புடைய நோய்கள் யாவை?
8)காற்றுச்சுவாசத்தில் நிகழும் தாக்கத்திற்கான ஈடுசெய்த சமன்பாட்டை தருக.
9)ATP இன் தொழில் ஒன்று தருக.
HERE YOU CAN DOWNLOAD THE PDF DOCUMENT EASILY.
Tags:
Grade 11