விலங்குப்பாகுபாடு
விலங்குப்பாகுபாடு தரம் 8 விஞ்ஞானம் , பாடஉள்ளடக்கம் - முள்ளந்தண்டிலிகள், முள்ளந்தண்டுளிகள், அவற்றின் இயல்புகள், போன்றவற்றை உள்ளடக்கிய pdf , அலகு ரீதியான பரீட்சை வினாத்தாள் என்பவற்றை இவ் இணையத்தளத்தினூடாக பதிவிறக்கலாம்.
சூழலில் வாழும் விலங்குகளை அவற்றின் பொதுவான இயல்புகளைக் கொண்டு கூட்டங்களாக வகைப்படுத்தல் விலங்கு பாகுப்பாடு எனப்படும். விலங்குகளை முள்ளந்தண்டு உள்ளவை, முள்ளந்தண்டு அற்றவை என பாகுப்படுத்தலாம்.
 |
| விலங்குப்பாகுபாடு - முள்ளந்தண்டிலிகள் தரம் 8 விஞ்ஞானம் |
- முள்ளந்தண்டிலிகள்
- முள்ளந்தண்டெண்புக்
கோர்வை
அற்றவை முள்ளந்தண்டிலிகள் எனப்படும்.
- முள்ளந்தண்டுள்ளவை
– முள்ளந்தண்டெண்புக்
கோர்வை உள்ளவை முள்ளந்தண்டுளிகள் எனப்படும்.
முள்ளந்தண்டிலிகள்
- புற
இயல்புகளை அடிப்படையாக கொண்டு முள்ளந்தண்டிலிகள் 4 கூட்டங்களாக்கப்பட்டுள்ளன.
- நிடாரியா
– குழிக்குடலிகள்
- அனலிடா
– துண்டப் புழுக்கள்
- மொலஸ்கா
– மென்னுடலிகள்
- ஆத்திரப்போடா
- மூட்டுக்காலிகள்
 |
| விலங்குப்பாகுபாடு - முள்ளந்தண்டிலிகள் தரம் 8 விஞ்ஞானம் |
நிடாரியா
( குழிக்குடலிகள்)
- ஊணுண்ணிகளாகும்
- நீர்
வாழ்க்கைக்கு உரியவை
- உதாரணங்கள்
- ஜதரா, கடல்அனிமணி, இழுதுமீன், என்பன இக்கூட்டத்தில் அடங்கும்.
 |
| விலங்குப்பாகுபாடு - முள்ளந்தண்டிலிகள் தரம் 8 விஞ்ஞானம் |
நிடாரியாக்களின் இயல்புகள்
- ஆரைச்சமச்சீரான உடலமைப்பு
- பொலிப்புக்கள் , மெதுசாக்கள் எனப்படும் இரு அமைப்புக்கள் காணப்படும்.
- பொலிப்புக்கள் நீருக்கு அடியில் ஆதாரத்துடன் ஒட்டிக்காணப்படும்.
- மெதுசாக்கள் இடப்பெயர்ச்சியடையும்.
- பரிசக்கொம்புக்கள் எனும் உடற்பகுதி காணப்படும். இவை நச்சுக்களை வெளியேற்றி இரையை பிடிக்கும்.
அனலிடா
- நன்னீர் , உவர் நீர், ஈரலிப்பான நிலம் ஆகியவற்றில் காணப்படும்.
- உதாரணமாக மண்புழு, நீரிஸ், அட்டை, லீச் அட்டை என்பன இவற்றில் அடங்கும்.
 |
| விலங்குப்பாகுபாடு - முள்ளந்தண்டிலிகள் தரம் 8 விஞ்ஞானம் |
அனலிடாக்களின் இயல்புகள்
- இருபக்க சமச்சீரான உடலமைப்பு காணப்படும்.
- உடல் துண்டங்களாக பிர்க்கப்பட்டு காணப்படும்
- நீண்ட உடலமைப்பு காணப்படும்.
- துண்டப்புழுக்களாகும்.
மொலஸ்கா
- நிலம், நன்னீர், உவர் நீர் என்பவற்றில் காணப்படும்.
- உதாரணமாக, நத்தை, சிப்பி, கணவாய் என்பன இதில் அடங்கும்.
 |
| விலங்குப்பாகுபாடு - முள்ளந்தண்டிலிகள் தரம் 8 விஞ்ஞானம் |
மொலஸ்காக்களின் உடலமைப்பு
- இருப்பக்கச் சமச்சிரானது.
- மென்மையான உடலமைப்பு (மென்னுடலிகள்)
- சிலவற்றில் ஓடுகள் காணப்படும்
- தசை செறிந்த பாதம் காணப்படும்.
- சீதத்தால் சூழப்பட்ட உடற்போர்வை காணப்படும்.
ஆத்திரப்போடா
- நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. அதிக எண்ணிக்கையில் காணப்படும் அங்கிகளாகும்.
- உதாரணமாக, இறால், தேள், சிலந்தி, மட்டைத்தேள், பூச்சிகள், நண்டு என்பன இவற்றில் அடங்கும்.
 |
| விலங்குப்பாகுபாடு - முள்ளந்தண்டிலிகள் தரம் 8 விஞ்ஞானம் |
ஆத்திரப்போடாக்களின்
இயல்புகள்
- இருபக்கச்
சமச்சீரானது
- சிலவற்றில்
சிறகுகள் காணப்படும்
- புறவன்கூடு
காணப்படும்.
- மூட்டுக்களைக்
கொண்ட தூக்கங்கள் காணப்படும். மூட்டுக்காலிகள் ஆகும்.
விலங்குப்பாகுபாடு தரம் 8 விஞ்ஞானம் , பாடஉள்ளடக்கம் - முள்ளந்தண்டிலிகள், முள்ளந்தண்டுளிகள், அவற்றின் இயல்புகள், போன்றவற்றை உள்ளடக்கிய pdf இணையத்தளத்தினூடாக பதிவிறக்கலாம்.