மனிதக்காதின் கட்டமைப்பு தரம் 9 விஞ்ஞானம்

மனிதக் காதின் கட்டமைப்பு 

மனிதக்காதின் கட்டமைப்பு தரம் 9 விஞ்ஞானம் மனிதக் காது, மனிதக் காதின் கட்டமைப்பு, தொழில்கள், நோய்கள் என்பவற்றை உள்ளடக்கிய முன்வைப்புக்களிற்கான என்பன இவ் இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

மனிதக்காது பிரதானமாக 3 பிரதேசங்களைக் கொண்டது.

  1. புறச்செவி                                                       
  2. நடுச்செவி
  3. உட்செவி

மனிதக்காதின் கட்டமைப்பு தரம் 9  விஞ்ஞானம்
மனிதக்காதின் கட்டமைப்பு தரம் 9  விஞ்ஞானம்


புறச்செவி 

பின்வரும் பகுதிகளைக் கொண்டது.

  • செவிச்சோணை
  • புறச்செவிக்கால்வாய்
  • செவிப்பறை மென்சவ்வு


செவிச்சோணை

  • ஒலியலைகளை புறச்செவிகால்வாயினுள் செலுத்தும். கசியிழையத்தால் ஆக்கப்பட்டது.

புறச்செவிக்கால்வாய்

  • ஓலியலைகளை செவிபறைக்கு கடத்தும்.

செவிப்பறை மென்சவ்வு

  • ஒலியலைகளை பெற்று அதிர்வடையும். கேட்டலுக்குரிய புலனை கொடுக்கும்.


டுச்செவி

நடுச்செவி பின்வரும் பகுதிகளை கொண்டது.

  • செவிச்சிற்றென்புகள்
  • ஊத்தேக்கியாவின் குழாய்

செவிச்சிற்றென்புகள்

  • ஒலியதிர்வுகளை கடத்தும்
  • செவிப்பறை மென்சவ்வில் இருந்து நத்தைச்சுருளை நோக்கி அதிர்வுகளை கடத்தும். மூன்று செவிச்சிற்றென்புகள் உள்ளன.
  • சம்மட்டியுரு , பட்டையுரு , ஏந்தியுரு

ஊத்தேக்கியாவின் குழாய்

  • தொண்டையுடன் தொடர்புபட்ட குழாயாகும் . அமுக்க சீராக்கத்தில் பயன்படும்.


உட்செவி

இது மூன்று பகுதிகளைக் கொண்டது

  • நத்தைச்சுருள் 
  • செவி நரம்புகள் 
  • அரைவட்டக்கால்வாய்.

நத்தைச்சுருள்

  • செவி நரம்பிற்க்கு கேட்டலிற்கான புலங்களைக் கடத்தும்.

செவி நரம்புகள்

  • மூளையுடன் காதை இணைக்கும் பகுதியாகும். கேட்டலுக்குரிய புலங்களை காதை நோக்கிக் கடத்தும். ஒலி இதனூடாக இனங்காணப்படும்.

அரைவட்டக் கால்வாய்

  • இது கேட்டலுடன் தொடர்பான தொழில்களை மேற்கொள்ளாது. உடற்சமநிலையை பேண உதவும்.


ONLINE ASSESMENT EXCERSICE



Post a Comment

Previous Post Next Post